சிறுமி அஃப்ரா பாத்திமாவை சந்தித்து உடல் நலம் விசாரித்து, நிதியுதவி வழங்கிய செந்தலைப்பட்டினம் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் ..!!

மல்லிப்பட்டினம் விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி அஃப்ரா பாத்திமாவின் மருத்துவ செலவிற்காக பலரும் தங்களுடைய நிதி உதவிகளை வழங்கி, தற்பொழுது அந்த சிறுமியின் உடல் நலத்தில் நல்லதோர் முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் செந்தலைப் பட்டினம் வளர்ச்சி மன்றம் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறுமி அஃப்ரா பாத்திமா மற்றும் அவரது பெற்றோர்களை வீட்டில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் அவர்களுக்கு தேவையான, இதர மருத்துவ செலவிற்காக தங்களுடைய நிதி உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது செந்தலை பட்டினம் வளர்ச்சி மன்ற நிர்வாகிகளும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொருளாளர் ரியாஸ் அகமது அவர்களும் உடன் இருந்தனர் .

Post a Comment

Previous Post Next Post