மல்லிப்பட்டினம் ஏரியா பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 73 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் ..!!

நாடு முழுவதும் 73 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சை தெற்கு மாவட்டம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மல்லிப்பட்டினம் ஏரியாவில் ஏரியா அலுவலகத்தில் காலை 8 மணி அளவில், 73 வது சுதந்திர தின விழா கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மல்லிப்பட்டினம் ஏரியா தலைவர் இத்ரிஸ் தலைமை தாங்கி முன்னிலை வகித்தார். ஏரியா செயலாளர்  முஸம்மில் தலைமை உரை வழங்கினார். மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் கமருதீன் B.Sc அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பித்தார். ஜமாஅத் நிர்வாகிகளும் நல மன்ற நிர்வாகிகளும், sdpi கட்சியின் நிர்வாகிகளும், மல்லி நியூஸ் குழுமத்தின் தலைமை நிறுவனர்  ஜெமிம் அலி  அவர்களும் ,














பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கிளை நிர்வாகிகளும் ,செயல் வீரர்களும், இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாசிச சக்திகளிடமிருந்து  இந்தியாவை காப்பாற்றுவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .இறுதியில் சகோதரர் நைனா முஹம்மது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

பிறகு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அழைப்பின் பேரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மல்லிப்பட்டினம் ஏரியா நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேசிய கொடியினை வழங்கி சிறப்பித்தனர்.

Post a Comment

Previous Post Next Post