மல்லிப்பட்டினத்தில் காரசார விவாதத்துடன் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ..!!

நேற்று (15/08/2019) சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சியின்  தனி அலுவலர் அவர்களும், சரபேந்திர ராஜன் பட்டினம்  மல்லிப்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகத்தின் கிளார்க் தெட்சணாமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டனர்.

இதில் sdpi கட்சியின் நிர்வாகிகளும், மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாகிகளும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் ,ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். sdpi கட்சியின் நிர்வாகிகளும் மனுவை அளித்து சென்று கிராம சபை கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்ற கேள்விகளை எழுப்பி கிராம சபை கூட்டம் காரசார விவாதத்துடன் நடைபெற்றது. Sdpi கட்சியின் சார்பிலும் பல கோரிக்கைகளை மனுவாக அளிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் ஜலீல் முஹைதீன் அவர்கள் ஊராட்சியின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளித்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.


கஜா புயலின் பாதிப்பில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை என பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மல்லிப்பட்டினம் முதல் இரண்டாம் புலி காடு ஈசிஆர் சாலையில் உள்ள மதுக்கடையினால் சிறுமி விபத்துக்குள்ளாகி நெடிய மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்ததே சுட்டிக்காட்டி இரவு நேரங்களில் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கோரிக்கை வைத்து உடனே இந்த மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

இதற்கு அதிகாரிகள் உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் அரசாங்கத்திற்கு பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் எனக்கூறி, முன்னர் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் வைத்த கோரிக்கைகள் முடிந்தவரை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், மீத கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது எனவும் கூறினார்.




Post a Comment

Previous Post Next Post