பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சக்திவாய்ந்த நிலநடுக்கம் , பிலிப்பைன்ஸ் நாட்டில் டாவோ ஓக்சிடெண்ட்டல்  6.4 ரிக்டர் அளவிலான ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ ஓக்சிடெண்ட்டல் (Davao Occidental) மாகாணத்தில் முன்னதாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானதாக, பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது.
நிலப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோஸ் அபாட் சாண்டோஸ் நகரிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும், சுமார் 60 கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 
டாமாகாணம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தோ, காயம், உயிரிழப்புகள் உள்ளிட்ட சேதம் குறித்தோ எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

Post a Comment

Previous Post Next Post