இஸ்ரேல் நாட்டின் நூலகத்தில் மகாத்மா காந்தி எழுதிய கடிதம்



80 ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி யூதர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதம், இஸ்ரேல் நாட்டில் நூலகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டின்மீது ஜெர்மனி படையெடுத்த கடந்த 1939ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் தேதி, மும்பையில் இயங்கும் மும்பை சியோனிஸ்ட் சங்கத்தின் தலைவராக இருந்த ஷோஹெட் என்பவருக்கு தேச தந்தை மகாத்மா காந்தி கடிதம் எழுதியிருந்தார்.
 யூத மக்கள் ஜெர்மனியர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்ட அந்த காலக்கட்டத்தில், யூத மக்களுக்கென தேசிய அளவில் ஆதரவு திரட்ட இந்திய யூதரான Shohet , இந்திய தலைவர்களின் உதவியை நாடி வந்தார். இரண்டாம் உலக போர் தொடங்கிய செப்டம்பர் 1ம் தேதி, யூத மக்களின் புத்தாண்டு தினம் என்பதால், அன்றைய தினம் Shohet-க்கு வாழ்த்து தெரிவித்து காந்தி, அந்த கடிதத்தை தனது கைப்பட எழுதியிருந்தார். அதில், இந்த புத்தாண்டில், பாதிக்கப்பட்ட யூத மக்களுக்கு அமைதி திரும்ப வேண்டும் என தான் விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதமானது இஸ்ரேல் நாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அண்மையில் அங்குள்ள தேசிய நூலகம் ஒன்று, Leir என்ற அறக்கட்டளையுடன் சேர்ந்து நாட்டின் பழம்பெரும் பொருட்களான தனிப்பட்ட கடிதம், புகைப்படங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின்போது, மகாத்மா காந்தி எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது இஸ்ரேலில் உள்ள தேசிய நூலகத்தில் ‘அமைதியின் சகாப்தம்’ என்ற பெயரில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post