கடும் அவதியில் மல்லிப்பட்டினம் ராமர் கோவில் பகுதி மக்கள் .! விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் ..!! ( புகைப்படங்கள் இணைப்பு)!

மல்லிப்பட்டினம் ராமர் கோவில் பகுதியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை மற்றும்  அருகில் உள்ள மின்கம்பத்தில் ஆபத்தான நிலையில் மீட்டர் பெட்டி .!

மல்லிப்பட்டினம் ராமர்கோவில் பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்த சாலை வழியாகத்தான் மாணவர்கள் தினமும் பள்ளிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கும் சென்று வருகின்றனர்.

தற்பொழுது இரவு நேரங்களில் மழை பெய்வதால் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

இதனால் தினமும் சாலையைக் கடக்கும் மாணவர்களும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் அப்பகுதியில் நோய்த் தொற்று அதிகமாக பரவுவதாக மக்கள் புகார் அளிக்கிறார்கள்.



அதுமட்டுமல்லாமல் ..,

ராமர் கோவில் பகுதியில் இதே சாலையின் அருகில் சாலை ஓரமாக  மின் கம்பம் ஒன்றும் உள்ளது. அந்த மின் கம்பத்தில் மின்விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. அதே மின் கம்பத்தின் கீழ் பகுதியில் தரையில் இருந்து 3 அடி உயரத்தில் பாதுகாப்பற்ற முறையில் மீட்டர் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

 அந்த பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள பீஸ் கேரியர் மூலம்தான் அப்பகுதியில் மற்ற மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அந்த மீட்டர் பெட்டியின் மூடி உடைந்த நிலையில் திறந்து கிடப்பதால் பாதுகாப்பற்ற முறையில் பீஸ் கேரியர் உள்ளது.

அப்பகுதி சிறுவர்கள் அதிகமாக ஒன்று கூடி விளையாடும் பகுதி  ஆகும்.

தற்பொழுது இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் அந்த சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் காரணத்தினாலும் மின் கசிவு ஏற்படுவதாகும், அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு உயிர் சம்பந்தப்பட்ட இந்த நிலைமையையும் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை மற்றும் மின்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை விரைந்து சரி செய்யுமாறு மல்லி நியூஸ் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் ..!!








Post a Comment

Previous Post Next Post