குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி P.D.O அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்த மல்லிப்பட்டினம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ..!!




மல்லிப்பட்டினத்தில் (21/09/2019) அன்று சேதமடைந்து இருக்கும் குடிநீர் தொட்டியை P.D.O அவர்கள் நேரில் பார்வையிட்டார்.  P.D.O வை நேரில் சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி P.D.O அவர்களிடம் நேரில் கலந்தாலோசித்தனர்.









அதாவது,

சேதமடைந்து இருக்கும் குடிநீர் தொட்டியை விரைந்து அகற்ற வேண்டும்.  இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மாற்று குடிநீர் தொட்டி கட்டி தரவேண்டும்.

மல்லிப்பட்டினத்தில் நிரந்திர குப்பை கிடங்கு ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு ஊராட்சியில் நிரந்தர பணியாளர்களையும், தேவையான வாகன வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆண்டிகாடு பஞ்சாயத்தில் உள்ள சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பகுதிகளில் மின் விளக்குகள் அமைப்பதற்கு லைன்கள் இல்லாத காரணத்தினால் அமைக்கப்பட முடியவில்லை. விரைந்து  இதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் மழைநீர் ஓடுவதற்கு நிரந்தர வடிகால் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

- போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

 அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக இன்று  (23/09/2019)  P.D.O அலுவலகம் சென்று P.D.O அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மல்லிப்பட்டினம் கிளை தலைவர் ரபீக் கான், நிர்வாகிகள் முகைதீன் பிச்சை அப்துர் ரஹ்மான் ஹாரிஸ் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post