மல்லிப்பட்டினத்திற்கு V.A.O அலுவலகம் அமைத்து தரவேண்டும் .! கிராமசபை கூட்டத்தில் ஜமாஅத் நிர்வாகம் கோரிக்கை .!!

தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.(02/10/2019)

 அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் ஜி. கே மூப்பனார் மண்டபத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.


இதில் மல்லிபட்டினம் ஜமாஅத் தலைவர். ஜனாப். ஹாஜி. கமருதீன், ஜமாஅத் செயலாளர்.SRK ஹசன்மைதீன் மற்றும் ஜமாத் பொருளாளர். அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post