சீனாவில் உணவுச் சந்தை மூலம் மீண்டும் பரவ தொடங்கிய கொரோனா!.

சீனா தலைநகர் பீஜிங்கில் உள்ளூர் மக்கள் 6 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று ஒருவருக்கு கொரோனா இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் சமீபத்தில் பீஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி உணவுச்  சந்தைக்கு சென்று வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அங்கு மேலும்  5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஜின்ஃபாடி இறைச்சி சந்தையில் இருந்த 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஜிங்கிற்கு சுற்றுலா வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அங்குள்ள சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்படுள்ளன.

இது குறித்து தெரிவித்துள்ள ஜின்ஃபாடி நகர அதிகாரிகள், இறைச்சி சந்தையில் இருந்தவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அது  தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டங்கள் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு அருகில் உள்ள மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post