மல்லிப்பட்டினத்தில் SDPI கட்சியின் 12 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.



தஞ்சை தெற்கு மாவட்டம், *மல்லிப்பட்டினம் நகரம்* சார்பில் SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி இன்று (ஜூன்.21) கட்சியின் கொடியேற்றப்பட்டது.

மல்லிப்பட்டினம் நகரத்தலைவர் அப்துல் பஹது தலைமையேற்றார்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம்
 முன்னிலை வகித்தார். 

நகர செயலாளர் ஜவாஹீர் சிற்றுறையாற்றினார்.

 நகர தலைவர் கட்சியின் சிவப்பு, பச்சை நட்சத்திரம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஏரியா தலைவர் ரபிக்கான்,  SDPI கட்சியின் முன்னால் தஞ்சை தெற்கு மாவட்ட  பொருளாளர் சேக் ஜலால், மற்றும்  செயல்வீரர்கள் உடனிருந்தனர் 
இறுதியாக முக கவசம் வழங்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post