மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி வளகத்தில் சில சமூக விரோதிகள் இரவில் மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
மல்லிப்பட்ட்னதில் அரசு மேனிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை சுவரில் வீசியபடி உடைந்த நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் அட்டூழியம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு சென்று பொழுதை கழிக்கின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்லி நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Post a Comment