21.07.2020 அன்று காலை ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி முழுவதும் கடைகள் திறப்பு நேரம் ஒரு வாரத்திற்கு காலை 6 மணி முதல் 2மணி வரை மட்டும் என ஊர் பொதுமக்கள் முடிவு.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தஞ்சை மாவட்டத்தில் சுய ஊரடங்கை,கட்டுப்பாடுகளை தங்களுக்கு தாங்களே ஊர் நிர்வாகிகள், ஜமத்தார்கள் ஆலோசனை படி
மக்கள் கடைகள் அடைப்பு,கடை திறப்பு நேரம் குறைத்தல் போன்ற பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதில் ஜமாத் நிர்வாகிகள் கடை உரிமையாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அனைத்து கடைகளின் உரிமையாளர் ஆதரவு தெரிவித்தனர்.
பால்,மருந்தகங்கள் மஇரவு 8 மணிவரை செயல்படவும்,ஏனைய கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி,உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி,
ஆகிய நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து ஒத்துழைப்பு தந்துள்ளனர்.
#மல்லி_நியூஸ்
Post a Comment