இவருக்கும் கொரானா தொற்றா ..?

முன்னாள் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா உறுதி.!
முன்னாள் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா உறுதி.!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் செய்து உள்ளார். அதில், வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என் உடல் மோசமாக இருந்ததால், நான் சோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. விரைவாக மீண்டுவர பிரார்த்தனை தேவை என பதிவிட்டு உள்ளார். 

 பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர்களில் உமர், ஜாபர் சர்பராஸுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி  ஆவார். கொரோனா காலகட்டத்தில் ஷாஹித் அப்ரிடி தனது அறக்கட்டளை வழியாக பல உதவிகளை செய்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post