மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம் திமுக கிளை சார்பாக கருப்புப்கொடி ஏந்தி போராட்டம்...!!!

மல்லிபட்டினம்,புதுப்பட்டினம் திமுக கிளை சார்பில், அக்கட்சியின் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்லிப்பட்டினம் கிளை சார்பாக நிர்வாகிகள்
தலைமையிலும்,
புதுப்பட்டினத்தில் கிளை சார்பாக சாகுல் ஹமீது (,செயலாளர் அமீரக திமுக)  ஆகியோர் தலைமையில் 

அந்தந்த பகுதிகளில்
 அக்கட்சியினர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதில், மின் கட்டண 'ரீடிங்' எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டு, ஊரடங்கு கால மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத் தவணையாகச் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக்கோரி வலியுறுத்தப்பட்டது.
இதில் அக்கட்டசியின் நிர்வாகிகள் ,
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post