இருசக்கர வாகனத்தில் சென்றபோது மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மாடு குறுக்க ஓடியதால் விபத்தில் கம்பி பிட்டர் உயிரிழந்தார்.
வேலையை முடித்து சொந்த ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.
ECR சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தரத்தில் பறந்து சென்று, கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சுரேஷ் இடது கையில் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதைப்பார்த்து மல்லிப்பட்டினம் ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷை மீட்டு அருகில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுரேஷ் க்கு முதலுதவி அளிக்கபட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பட்டது.
இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வந்துள்ளது.
மல்லி நியூஸ் வாயிலாக பலமுறை விழிப்புணர்வு பதிவு பதிவிட்டிருந்தோம்
கால்நடைகளின் கூடாராமாகும் ECR சாலை என்று இன்று ஏளனமாக பேசிய விளைவு ஒரு உயிரை பறிபோயிருக்கிறது.
எந்த ஒரு விழிப்புணர்வு செய்தி பதிவிட்டால் திருத்தி கொள்ளுங்கள் ஏளனமாக பேசாதீர்கள் ஊர் நலனில் உங்கள்
மல்லி நியூஸ்
Post a Comment