எமிரேட்ஸ் பயணிகளுக்கு எக்ஸ்போ 2020 இல் பார்வையிட ஒரு நாள் இலவச டிக்கெட் அறிவிப்பு.
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அக்டோபர் 1 முதல் மார்ச் 31 2022க்குள் வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் துபாய் எக்ஸ்போ 2020 பார்வையிட ஒருநாள் டிக்கெட் இலவசமாக வழங்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், துபாய் விமானம் நிலையம் வழியாக மட்டுமே பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த டிக்கெட் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. துபாய் விமான நிலையத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியது இருந்தால் எக்ஸ்போ 2020 கலந்து கொள்ள இலவச டிக்கெட் பெற முடியும்.
விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது எக்ஸ்போ 2020 இலவசமாக ஒருநாள் நுழைவு டிக்கெட் பெறுவதற்கான ஒரு சிறப்பு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பயணிகள் இமெயில் அனுப்ப வேண்டும் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Post a Comment