14 வது ஐஎபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு தற்போது அடுத்த மாதம் முதல் தொடர இருக்கின்றன.
செப்டம்பர் 19 ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபாயில் பலப்பரிட்சை நடத்துகின்றன.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே அமீரகம் வந்தடைந்த சென்னை அணி , தனிமைப்படுத்துதலுக்குப் பின்னர் நேற்று முதல் பயிற்சியை தொடங்கினர் .
துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கேப்டன் தோனி , சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களை அணி நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது .
முதல் ஆளாக அமீரகம் வந்தது மட்டுமின்றி பயிற்சியை தொடங்கிய சென்னை அணி , கோப்பையை வென்று தாயகம் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .



Post a Comment