நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரையிடம் வழங்கினர்.
சட்டமன்றத்தில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக தலைமையிலான அரசு பக்க பலமாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் பஹாத் முகமது,மாவட்ட செயலாளர் ஜலீல் முகைதீன் மாவட்ட பொருளாளர் சுதாகர், சட்ட ஆலோசகர் செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் குமரேசன், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் அஸ்ரப், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment