சேறும்,சகதியுமாக காட்சி தரும் புதுமனைத் தெரு சாலை.!

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவில் இருந்து சின்னமனை தெரு செல்லும் சாலைகள் அண்மையில் பெய்த மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி.

சின்னமனையில் இருந்து துறைமுகம் செல்லக்கூடிய பிரதான சாலையாகும்.இந்த சாலையில் சேறும் சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் மற்றும் மதராசாவில் பாடம் படிக்கும் மாணவர்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.இதனை உடனடியாக சரிசெய்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.இங்கு அமைக்கப்படும் தரமற்ற சாலைகளே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post