தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் புதுமனை தெருவில் உள்ள மின் கம்பத்தில் தரையைத் தொடும் மீன் உயர்கலை சரிசெய்துவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெரு மசூதி அருகே அமைந்துள்ள மின்கம்பத்தில் உள்ள பெட்டியில் இருந்து கீழே தொங்கும் மின் ஒயர்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அந்த பகுதி வழியாக தான் மதராஷா மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்கள்,மாணவர்கள் சென்று வரக்கூடிய சூழல் இருக்கிறது.சிறுவர்கள் விளையாட்டு தனமாக அந்த மின் ஒயர்களை தொடக்கூடிய அபாயமும் இருப்பதாலும், ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment