மல்லிப்பட்டிணத்தில் மழையால் வீடு இடிந்து உயிரழந்தவரின் குடும்பத்தினருக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்..!

தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மழையினால் இடிந்து விழுந்த வீடுகளில் சிக்கி மரணமடைந்த குடும்பத்தினருக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆறுதல் கூறினார்.

கடந்த இரண்டு நாட்களாக பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான மழை பெய்து வந்தது. இந்நிலையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் அருகே கே.ஆர்.காலணி பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரின் வீடு மழையின் காரணமாக முற்றும் இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த சின்னக்கண்ணு,அவரின் மனைவி காளியம்மாள்,மகன் சித்திரவேல் மருமகள் ஆனந்தி  மற்றும் அவர்களின் குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கினர் அவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில் சிகிச்சை பலனின்றி சின்னக்கண்ணு இறந்துவிட்டார்.

இறந்த சின்னக்கண்ணு குடும்பத்திற்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தார்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,வார்டு உறுப்பினர் நூருல் ஹமீது, சோழமண்டல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மக்கள் சமூக சேவை மன்ற சோழ மண்டல செயலாளர் ஜலீல் முஹைதீன்,இரண்டாம் புலிக்காடு கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து,ஆண்டிகாடு வருவாய்  ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post