5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது.
மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.
Post a Comment