தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் வேலை இழப்பு..!

 


வானிலை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பத்தாயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்கள் வேலையை இழந்துள்ளனர்.


தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல் சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிப் பட்டினம், அண்ணா நகர் புதுத்தெரு, செம்பியன் மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உள்ளிட்ட 32 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில் 4500 நாட்டுப் படகுகளும், மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 157 விசைப்படகுகளும் உள்ளன. விசைப்படகுகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களிலும், நாட்டுப்படகுகள் பிற தினங்களிலும் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. கடல் சீற்றம் காரணமாக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் படகுலகள் அனைத்தும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடி துறைமுகங்களில் கடை வைத்து தொழில் நடத்துபவர்கள், கூலி தொழிலாளர்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post