இறந்தவர் உடலை மூவாயிரம் கிலோ மீட்டர் தூரம் ஹரியானா மாநிலத்திற்கு எடுத்துச் சென்ற தமுமுக ஆம்புலன்ஸ் !

 


இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹரியானா மாநிலம் மகேந்திரகர்வ் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கர் (70), துர்கா தேவி (65) மற்றும் அவரது மகன் ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தனர். இந் நிலையில் கடந்த 17-12-2022 அன்று  துர்கா தேவி(65) மரணம் அடைந்தார். அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.அவரது உடலை ஹரியானா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்று இறுதி சடங்கு செய்திட குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.ஆனால் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் களும் தூரம் அதிகம் என்ற காரணத்தால் உடலை எடுத்துச் செல்ல மறுத்தனர். 

இந்நிலையில் தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் எஸ் சலிமுல்லாஹ்கான், மாவட்டத் தலைவர் இப்ராஹிம்  மற்றும் மருத்துவ சேவை அணி செயலாளர்  தாஜுதீன் அவர்களுக்கு குடும்பத்தினர்  வைத்த  கோரிக்கையை ஏற்று  நிர்வாகிகள் அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இவர்களது இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கருடன் உடலை எடுத்துச் செல்ல  முடிவு செய்தனர்.கடுமையான குளிர் நிலவும் இந்த பனிக்காலத்தில் சுமார் 2850 கி மீ தூரத்தை 48 மணி நேரம் பயணம் செய்து, துர்கா தேவியின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் மகேந்திரகர்வ் மாவட்டத்திற்கு உடலை அடக்கம் செய்ய உதவினார்.

அர்ப்பணிப்பு மிக்க இந்த பணியில் ஈடுபட்ட  அனைத்து  சகோதரர்களுக்கும் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.

Post a Comment

Previous Post Next Post