இந்திய தேசிய காங்கிரஸ் 138 வது துவக்க நாளை முன்னிட்டு தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நம் பாரத தேசத்தை மீட்டெடுக்க வேண்டும் மத நல்லிணக்கத்தை பேணி அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கி நூறு நாளை கடந்து விட்டது.
இந்த நடை பயணம் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்று இன்று மல்லிப்பட்டினத்தில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி தலைமையில் இனிப்பு வழங்கி கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் கமால் பாஷா,சிறுபான்மை துறை நகரத் தலைவர் முகமது அப்துல் காதர்,சகாப்தீன்,சையத் இப்ராஹிம்,தாஜுதீன்,ஷேக் அப்துல்லா,உபயதுல்லா மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment