தஞ்சையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.!



 தஞ்சை மாவட்டத்தில் வரும் ஜனவரி மாதம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் ஜனவரியில் நடைபெற உள்ளது. இதில் கபடி, சிலம்பம், டென்னிஸ், பழுது தூக்குதல், கடற்கரை கைப்பந்து போட்டி இறகுப்பந்து, கால்பந்து நீச்சல், மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், என பலரும் பங்கேற்கும் வகையில், பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

Post a Comment

Previous Post Next Post