புயல் காரணமாக மீன்பிடிக்க தடையுள்ள நிலையில் இராமநாதபுர மாவட்ட மீனவர்கள் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிக்கும் காட்சி.!

 


தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் அந்தமான் கடல்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணாமன மீன்வளத்துறை அனுமதி சீட்டு வழங்காததால் கடந்த ஒருவார காலமாக தொழிலுக்கு செல்லாமல் மிகுந்த பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட படகுகுளில் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இரவு நேரங்களில் தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் மீன்களை இறக்குமதி செய்து வருகின்றனர்.

ஒரு மாவட்ட மீனவர்களுக்கு மட்டும் தடை அறிவப்பு அருகில் உள்ள மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடையில்லையா என்று மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.அனுமதி இல்லாமல் மீன்பிடித்த படகுகள் மீதும்,உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாகும்.









Post a Comment

Previous Post Next Post