மாண்டஸ் புயல் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு.!

 


மாண்டஸ் (Cyclone Mandous) தீவிரமடைந்து வரும் நிலையில் தென்மண்டல ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இயக்குனர் இன்று யில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே தென் கிழக்கு திசையில் 770 கி.மீ தொலைவில் உள்ளது. காரைக்கால் தென் கிழக்கே 690கி.மீ தொலைவில் நிலைகொண்டு உள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மாண்டஸ் புயல் (Cyclone Mandous) காரணமாக டிசம்பர் 08 ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

Post a Comment

Previous Post Next Post