அதிராம்பட்டினத்தில் SDPI கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)...!

 


தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் SDPI கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் SDPI கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் SDPI கட்சியின்  மாவட்ட தலைவர் N.முஹம்மது புகாரி.MBA அவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுச்செயலாளர் N.M. சேக் தாவூது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட செயலாளர் M.முகம்மது ரஹீஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.மாவட்ட,நகர,கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நா.இளந்தென்றல் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார். 

சிறப்பு அழைப்பாளராக SDPI மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இமாம்.ஹஸ்ஸான் பைஜி அவர்கள் அவர்கள்  கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.இறுதியாக மாவட்ட பொருளாளர் PSM.மன்சூர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர். மேலும் 12 முஹல்லா கூட்டமைப்பு தலைவர் அசன்முகைதீன் கலந்துக்கொண்டார்.

 ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.











Post a Comment

Previous Post Next Post