உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மல்லிப்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்.!

 


தஞ்சை மாவட்டம் சேதுபவாசத்திரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில்  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மல்லிப்பட்டினத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டது.சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும்,மல்லிப்பட்டினம் கிளை செயலாளருமான ஹபீப் முகமது தலைமையில் வழங்கினர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்து மாணிக்கம்,மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ஆதி.ராஜேஷ்,பொது குழு உறுப்பினர் அ. தனபால் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

முன்னாள் மாவட்ட மீனவர்கள் அமைப்பாளர் அபுதாஹிர்,மல்லிப்பட்டினம் கிளை அவைத்தலைவர் அப்துல் அஜீஸ்,  கிளை செயலாளர்கள் சின்னையன், முனீஸ்வரன், மாசிலாமணி இளைஞரின் நிர்வாகிகள் மற்றும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தொடங்கபட்டு மல்லிப்பட்டினத்தில் வீடு,வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.







Post a Comment

Previous Post Next Post