சிறுபான்மையினர் மனதில் பயத்தை விதைக்க கூடாது. — திருச்சி சிவா MP உருக்கம்.



சிறுபான்மை மக்கள் மனதில் பயத்தை விதைக்க கூடாது என மாநிலங்களவையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உருக்கமாக பேசியுள்ளார்.

பொது சிவில் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாத கூட்டத் தொடரில் திருச்சி சிவா இவ்வாறு பேசியுள்ளார் இதற்கு முன்பே பலமுறை தாக்கல் செய்யப்பட்ட பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி நிராகரிக்கப்பட்டது இதை தற்போது பாஜக அரசு மீண்டும் தாக்கல் செய்துள்ளது.

இந்தியா என்ற நாட்டின் அடித்தளமே கூட்டாட்சி தத்துவம் மற்றும் மதச்சார்பின்மை தான் அதை இந்த மசோதா சிதைப்பதாகவும் மேலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் நான் பல விஷயங்களை நினைவு படுத்தி பார்க்கிறேன் எனவும் அதில் முக்கியமாக இங்குள்ள அவை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதும் இங்கிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் நாங்கள் இஸ்லாமியர்கள் தான் ஆனால் இந்தியர்கள் என்று இந்த நாட்டை விட்டு வெளியே செல்ல மறுத்தார்கள் அதை மட்டும் அல்லாமல் இந்திய விடுதலைக்காகவும் இந்தியாவின் வறட்சியான சந்தர்ப்பங்களிலும் இந்தியாவின் பல முக்கிய சந்தர்ப்பங்களில் இஸ்லாமியர்களின் பங்கு மிகவும் அதிகமாக ஈடுபட்டு உள்ளது இங்குள்ள சிறுபான்மையினரை அச்சப்படுத்தும் விதமாக இந்த மசோதா இருப்பது இந்த மசோதாவை தாக்கல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதற்காக அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றி நாட்டின் சகிப்புத்தன்மையை மதச்சார்பின் சிதைக்க முயற்சிப்பதை ஒரு காலம் ஏற்றுக் கொள்ள முடியாது நாடே நாடாளுமன்றத்தின் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும் என திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் தனது உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post