மல்லிப்பட்டினத்தில் ஈச்சர் கனரக வாகனம் பைக் மீது மோதி விபத்து.!



 தஞ்சை மாவட்டம்,  மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஈச்சர் கனரக வாகனம் பைக் மீது மோதி விபத்து ஒருவர் காயம்.

பேராவூரணி நோக்கி சென்று கொண்டிருந்த காய்கறி ஏற்றி வந்த ஈச்சர் கனரக வாகனம் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆண்டிக்காட்டை சேர்ந்தவர் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக அங்குள்ளவர்களால் மீட்டு எஸ்டிபிஐ ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.விபத்து ஏற்படுத்திய ஈச்சர் வாகனத்தின் ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்திவிட்டு வண்டியை சாலையிலே போட்டுவிட்டு ஓடிவிட்டார்.

தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்







Post a Comment

Previous Post Next Post