ஆளுநரைக் கண்டித்து பேராவூரணியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.!

 


தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியைக் கண்டித்தும், மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில்நிலையம் அருகே, வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். சிங்காரம் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ், மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்சா, மாவட்டப் பொருளாளர் நெப்போலியன், மாவட்டத் துணைத் தலைவர் மாரிமுத்து, வட்டாரத் தலைவர்கள் சேக் இப்ராம்ஷா (சேதுபாவாசத்திரம்), இளங்கோ (பேராவூரணி), நகர காங்கிரஸ் தலைவர் நடராஜன், சேவாதளம் மாவட்ட தலைவர் தெட்சிணாமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் அண்ணாமலை, மாவட்ட சிறுபான்மை துறை செயலாளர் நாகூர் கனி, வெங்கடாசலம், கணேசன் மற்றும் 50 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசு ஆளுநர் ரவியைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Post a Comment

Previous Post Next Post