மனோரா பூங்கா,படகு சவாரி பொது ஏலத்தில் விட ஒன்றிய குழு உறுப்பினர் மீனவராஜன் கோரிக்கை.!

 


சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சடையப்பன்  ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில் சரபேந்திரராஜன்பட்டினம் ஒன்றிய குழு உறுப்பினர் மீனவராஜன் பேசுகையில் மனோரா சுற்றுலா தல பூங்கா ஏற்கெனவே ஏலத்தில் விடப்பட்டது. தற்போது மேம்படுத்தப்பட்ட நிலையில் மனோரா பூங்கா, படகு சவாரி ஆகியவை ஏலம் விடப்படாமல் உள்ளது. இதன் வருமானம் தனிநபருக்கு  செல்கிறது. எனவே, அவற்றை முறையாக பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 200மீ சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது எனவும் உடனடியாக அதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.

நிறைவாக  மேலாளா் நாகேந்திரன் நன்றி கூறினாா். 

Post a Comment

Previous Post Next Post