பட்டுக்கோட்டை அருகே ஆற்றுக்கரையோரத்தில் மனித எலும்புக் கூடு.!



பட்டுக்கோட்டையை அடுத்த கார்காவயல் அருகே மகாராஜா சமுத்திரம் காட்டாற்றின் கரை ஓரத்தில் மனித எலும்புக் கூடு கிடப்பதாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிரித்திவிராஜ் சவுகானுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தாலுகா காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் காவல்துறையினர் எலும்புக்கூடை கைப்பற்றினர். வழக்கு பதிவு செய்து அந்த இடத்திலேயே டாக்டர் நியூட்டன் தலைமையிலான மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் எலும்புக்கூடு அங்கேயே புதைக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post