தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் தீனியாத் மக்தப் மதரஸாவின் ஏழாம் ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த சனி,ஞாயிறு(மார்.11,12) ஆகிய இரு தினங்களாக ஜூம்ஆ பள்ளியில் மக்தப் மதரஸாவில் பயிலும் மாணாக்கர்களுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
சமுதாய நலமன்ற தலைவர் சகாப்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் கமருத்தீன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தீனியாத் ஜோனல் முஆவின் மௌலவி உமர் ஃபாரூக் யூசுபி காஸிமி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பாங்கு போட்டி,கிராஅத் மனன போட்டி,பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் முதல் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கி ஊக்குவித்தனர்.போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவ,மாணிவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.இறுதியாக சமுதாய நலமன்ற துணைத்தலைவர் ஜலீல் முகைதீன் நன்றியுரை ஆற்றினார்.
Post a Comment