ஒருங்கிணைந்த 12மொஹல்லா ஜமாத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அசன் முகைதீன் தலைமையில் புதுப்பட்டினத்தில் நடைபெற்றது. அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்படுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒருங்கிணைந்த ஜமாத்கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஹிதாயத்துல்லா,செயலாளர் நவாஸ் கான்,பொருளாளர் முகமது சுல்தான், துணைச் செயலாளர் ஜனாப்.அன்வர் ராஜா,ஆலோசனை குழு உறுப்பினர்கள்,மற்றும் புதுப்பட்டிணம் ஜமாத்தார்கள், புதுப்பட்டினம் ஜமாத்து நிர்வாகிகள், புதுப்பட்டினம் ஜமாத் ஆலோசனைக் குழு கமிட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
குருவிக்கரம்பை,கரம்பக்காடு ஜமாத் நமது ஒருங்கிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
மதரஸாக்கள் இல்லாத ஊரில் மதரஸா ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் துவாவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
Post a Comment