ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்

மனித உயிர்களைப் பறிக்கும் ஆன்லைன்ல ரம்மியை தடை செய்ய வேண்டும் என்கிற மசோதாவை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களின் ஒப்புதல் பெற்று அதை தடை செய்ய வேண்டும் என்கிற மசோதாவை தயார் செய்து தமிழ்நாடு ஆளுநரான ஆர் என் ரவி அவர்களுக்கு சபாநாயகர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மசோதாவை அனுப்பி வைக்கப்பட்ட பிறகும் ஆளுநர் அவர்கள் அதை கண்டுகொள்ளாமலும்  அதற்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் இருந்த நிலையில் அந்த மசோதாவானது  கிடைப்பிலிருந்து ஆனால் நாளுக்கு நாள் ஆன்லைன் ரம்மியின் காரணமாக பல உயிர்கள் பாதிக்கப்பட்டு இருந்ததால் மீண்டும் சட்டமன்றத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள் ஒப்புதல் பெற்று ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாவது முறையும்  இந்த மசோதாவை அவர் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அல்லது மீண்டும் தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பினாலும் சட்டப்படி தவறு என்பதால் இன்று அவர் இந்த ஆன்லைன் ரம்மி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post