பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் விடை அளிக்க முயற்சி செய்து இருந்தாலே மதிப்பெண் வழங்கப்படும்- தேர்வாணையம் அறிவிப்பு
இந்த ஆண்டு நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக முழுவதும் பல்லாயிரம் கணக்கான மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வை சந்தித்தனர். இதில் கடைசியாக நடைபெற்ற கணித தேர்வில் வினா தவறுதலாக கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கருணை மதிப்பெண் வழங்கியது பள்ளி கல்வித்துறை தேர்வாணையம். தேர்வு வினா எண் 14 பிரிவு ஆ - ல் இடம்பெற்றிருந்த கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்க முயற்சி செய்திருந்தாலே அந்த வினாவிற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Post a Comment