முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்...

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை வெள்ளிக்கிழமை காலை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

திமுக எம்.பி. கனிமொழி பயணித்தபோது பயணச்சீட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஷர்மிளா கூறுகையில், தான் விளம்பரத்திற்காக பேருந்தில் ஆள்களை ஏற்றுவதாக பேருந்தின் உரிமையாளர் பேசியதாக வேதனையுடன் தெரிவித்தவர், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பயணச்சீட்டு எடுத்துதான் பயணித்தனர். 

கனிமொழி பேருந்தில் பயணித்தபோது அவருடன் வந்தவர்களிடம் நடத்துநர் கடுமையாக நடந்ததை கண்டித்தேன் என தெரிவித்தார்.

சில நாள்களுக்கு முன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் ஷர்மிளாவுக்கு வாழ்த்து கூறியிருந்தார். 

கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என பலராலும் பாராட்டவர் ஷர்மிளா.

Post a Comment

Previous Post Next Post