டெல்லியில் சென்ட்ரல் விஸ்டாவில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 28-ம் தேதி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்த நிலையில், நாட்டின் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது, பெரும் அதிருப்தியாக இருந்தது.
இதனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், மத்திய அரசு அதனை கண்டுகொள்ளாமல், திட்டமிட்டபடி பிரதமர் திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புறக்கணித்தனர்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் மாளிகை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, குடியரசு தலைவர் மாளிகை அதிருப்தி பதிலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Post a Comment