சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் காதரியா தெருவில் உள்ள உமறு புலவர் தெரு ரோடு வடக்குத்தெரு ரோடு இணைப்புச் சாலை சிமெண்ட் சாலையாக விரைவில் உதயம்
தஞ்சை மாவட்டம் சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி உமர் புலவர் தெரு சாலை மற்றும் வடக்கு தெருவை இணைக்கும் சாலை அளக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
மேடும்,பள்ளமாகவும் காட்சி தரும் இந்த சாலை நீண்ட காலமாக அமைக்கப்படாமல் இருந்தது, இதனால் மழைக்காலங்களில் பெண்கள்,பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தார்.சமுதாய நலமன்றத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.மேலும் சாலை குறித்து மல்லி நியூஸ் வாயிலாகவும் செய்தி வெளியிட்டு இருந்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா சாலையை அளவிடும் பணியில் ஈடுபட்டார் உடன் நூருல் ஹமீது இருந்தார்.
Post a Comment