தஞ்சாவூர் மாவட்டத்தில் 33 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வியாழக்கிழமை (அக். 26) உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் பெயர்-புதிய பதவி, (அடைப்புக் குறியில் பழைய பதவி) வருமாறு: அ. அருள்ராஜ் தஞ்சாவூர் வருவாய் வட்டாட்சியர் (பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர்), அ. தர்மராஜ் - திருவையாறு வருவாய் வட்டாட்சியர் (அரசு கேபிள் தஞ்சாவூர் தனி வட்டாட்சியர்), அ. மரிய ஜோசப் - பூதலூர் வருவாய் வட்டாட்சியர் (நகர்ப்புற நிலவரித் திட்ட கும்பகோணம் தனி வட்டாட்சியர்), சி. மணிகண்டன் - பாபநாசம் வருவாய் வட்டாட்சியர் (தஞ்சாவூர் முத்திரை தனி வட்டாட்சியர்). எஸ். பாக்கியராஜ் - திருவிடைமருதூர் வருவாய் வட்டாட்சியர் (திருவிடைமருதூர் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்), டி. சுகுமார் - பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் (பேராவூரணி வருவாய் வட்டாட்சியர்), ஆர். தெய்வானை பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் (பட்டுக்கோட்டை நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர்) உள்பட 33 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 33 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்.!
புதியவன்
0
Tags
தஞ்சை மாவட்டம்
Post a Comment