தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் பகுதிகளில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.
மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெரு,காயிதே மில்லத் நகர்,கே ஆர் காலணி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டு கும்பல் வீட்டினுள் ஏறி குதித்து உள்ளே சென்று இருசக்கர வாகனம்,மொபைல்,லேப்டாப் உள்ளிட்ட விலையுர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
நேற்று(அக்.20) மல்லிப்பட்டினத்தில் ஒரு வீட்டில் இரு சக்கர வாகனத்தை திருடியும்,இன்னொரு வீட்டில் வாகனத்தை திருடிவிட்டு கட்டையார் பாலம் அருகே உள்ள பாலத்தில் இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.இந்த சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.இதனை உடனடியாக காவல்துறை தலையிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் வீடுகளில் உள்ளவர்களும் விழிப்புணர்வுடன் இருந்திட வேண்டும்.
Post a Comment