தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். பேராவூரணி கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. பேராவூரணி கடைவீதி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு நடைபாதை போடப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகளையும் தாண்டி குறிப்பாக ஆவணம் சாலை முக்கத்தில் கடை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலை உருவானது.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், காவல் ஆய்வாளர் காவேரி சங்கர், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் தூய்மை பணியாளர்கள் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார் மேலும் ஆங்காங்கே அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரும் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Post a Comment