மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 79வது சுதந்திர தின கொண்டாட்டம்,பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கௌரவிப்பு.!



 தஞ்சை மாவட்டம்,சரபேந்திராஜன் பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வெகுமிகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதனுடைய ஒரு பகுதியாக மல்லிப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

தேசிய கொடியினை பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஏற்றி வைத்து மாணவர்கள் முன் சுதந்திர தின உரையாற்றினார்.

இதில் பள்ளியில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர்களை பாராட்டி மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் மற்றும் முகைதீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் சார்பில்  பரிசுகளும்,கேடயங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பேராசிரியர் அப்துல் காதர், மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,ராமர் கோவில், சின்னமனை, கிராமத்தார்களபொ துமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.











Post a Comment

Previous Post Next Post