மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமை பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வில் சிறப்பிக்க, சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றும், பள்ளிக் கல்வியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 % மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 1. 8. 2003இல் உள்ளபடி பொது பிரிவினருக்கு 21 முதல் 32 வயது வரையில் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயதிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு 37 வயது வரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரையிலும் இருக்கலாம். மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அறிஞர் அண்ணா சாலை தஞ்சாவூர் என்ற முகவரியில் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு.!
புதியவன்
0
Tags
தஞ்சை மாவட்டம்
Post a Comment