மல்லி நியூஸ் செய்தி எதிரொலியாக மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் குளம் போல் தேங்கி இருந்த மழை நீரை பார்வையிட்டு உடனடியாக
வெளியேற்றுவதற்கு சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தியதின் பேரில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மழைநீர் வெளியேற்ற வாய்க்கால்களை வெட்டிவிடும் பணியில் ஊராட்சி மன்ற பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காயிதே மில்லத் நகர் பகுதியில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றுவதற்கு உத்தரவிட்ட ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Post a Comment