தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையை முழுவதுமாக அமைத்திடாமலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலையின் உயரத்தை விட புதிய சாலை உயரமாக இருப்பதாலும்,வடிகால் வசதி இல்லாத காரணத்தாலும் அப்பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஏற்கனவே ஊராட்சி வளர்ச்சி அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது,மனு பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது,மேலும் ஊராட்சி மன்றத்திற்க்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதன் விளைவாக பொதுமக்களும்,பள்ளி செல்லும் குழந்தைகளும் அந்த குளம்போல் காட்சி தரும் மழை நீரில் தான் கடந்து செல்லக்கூடிய அவல நிலை இருந்து வருகிறது.இதனால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாய சூழல் இருந்து வருகிறது.
உடனடியாக அதிகாரிகளும்,ஊராட்சி மன்றமும் அப்பகுதி மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு தீர்வு காண வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment