அமீரை போஸ்டர் ஒட்டி பங்கம் பண்ணிய சூர்யா ரசிகர்கள்... சென்சார் சான்றிதழால் புதுக்குழப்பம்..!!!

பருத்திவீரன் பட விவகாரத்தில் கார்த்தி தரப்பு தொடர்ந்து மௌனம் காத்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், சூர்யா ரசிகர்கள் அமீருக்கு எதிராக போஸ்டர் ஒட்டி உள்ளனர். மேலும், தற்போது வெளியாகியுள்ள 'பருத்திவீரன்' பட சென்சார் சான்றிதழும் புதுக்குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.
'பருத்திவீரன்' படம் தொடர்பான பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இயக்குநர் அமீர், கார்த்தி தன்னை மதித்து 'கார்த்தி 25' நிகழ்வுக்கு கூப்பிடவில்லை என்று சொல்ல அவர் தன்னிடம் பணத்தை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்துள்ள பேட்டி இந்த சூழலை மேலும் பரபரப்பாகியது. இதற்கு பிறகு அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் சமுத்திரகனி, சசிகுமார், பாரதிராஜா, கரு பழனியப்பன், சேரன் என திரையுலத்தில் உள்ள பல முக்கிய இயக்குநர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் தொடர்ந்து கார்த்தி, சூர்யா இது குறித்து விளக்கம் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். இந்த நிகழ்வு தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் வருத்தம் தெரிவித்தார். ஆனால் இப்பொழுது சூர்யா ரசிகர்கள் அமீரை கண்டித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

'நன்றி கெட்ட துரோகி இயக்குநர் அமீரையும், அமீரின் அல்லக்கைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம். கருங்காலி பழனியப்பனுக்கு நாவடக்கம் தேவை. சிங்கம் அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா?' என்று அந்த போஸ்டரில் அவர்கள் எழுதியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாது 'பருத்திவீரன்' படத்தின் சென்சார் சான்றிதழும் வெளியாகியுள்ளது. இதில் தயாரிப்பாளர் என்ற இடத்தில் இயக்குநர் அமீர் பெயர் குறிப்பிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....


Post a Comment

Previous Post Next Post